ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரும் மனு : உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபா செலுத்துமாறும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனவ சமர்ப்பித்திருந்தார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்