ஜனாதிபதி செயலகத்திற்கு பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் நிறுவனங்களிடம் கையளிப்பு-வீடியோ இணைப்பு-
அமைச்சுக்கள் , திணைக்களங்கள்உள்ளிட்ட பல்வேறு அரசநிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் குறித்த நிறுவனங்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டன.
இதன்போது 19 வாகனங்களை மீளகையளிப்பதற்கான ஏற்பாடுகள ;செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15வாகனங்கள், முன்அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
அதன்படி, வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் 8 வாகனங்ளும், நிதிஅமைச்சின் 03 வாகனங்களும தென்மாகாணசபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஒவ்வொரு வாகனங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 15 வாகனங்கள்மீளக்கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான்கமகே, மேலதிக செயலாளர் மகேஷ்ஹேவாவிதாரண உள்ளிட்ட பலர் வாகனங்கள் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்