ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவமானது, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவும் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.