
ஜனாதிபதியின் கையெழுத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படலாம்: பிரதமர்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் அச்சிடப்படலாம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறியுள்ளார்.
பயன்படுத்த முடியாத பழைய நாணயத்தாள்களுக்கு பதிலாக, புதிய நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சிடுவதாகவும், புதிதாக அச்சிடப்படும் நாணயத்தாள்கள் தற்போதைய ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்படும் என்று பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இது ஒரு சாதாரண செயல் என்றும் பிரதமர் இதன்போது அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
