ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் பலி

வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

மின்வெட்டு காரணமாக பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின் 9 வயதான மகளும் 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.