சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவுத் திருப்பலி இன்று புதன் கிழமை நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கிழக்கிலங்கையின் பழமை வாய்ந்த புனித திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மக்கள் வெகுசிறப்பாக கொண்டாடினார்கள்.

இதன்போது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்து நற்கருணை ஆராதனை இடம்பெற்றதுடன், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.