சேனநாயக்க சமுத்திரத்தின் 5 அவசர வான் கதவுகள் திறப்பு

அம்பாறை – சேனநாயக்க சமுத்திரத்தின் 5 அவசர வான் கதவுகள் இன்று காலை 8 மணியளவில் 6 அங்குலம் வரையில் திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நேற்று சனிக்கிழமை முதல் பெய்து வரும் கன மழை காரணமாக சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் 106.6 அடி வரையில் உயர்ந்துள்ளது.

இதேவேளை வெள்ள அபாயம் தொடர்பில் சேனநாயக்க சமுத்திரத்தின் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபயவிக்ரம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் பொலிஸார் மற்றும் முப்படையினருடன் கலந்து ஆலோசித்து வெள்ளம் சூழக்கூடிய வீதிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM