
சென்னை அணியின் 16 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த பஞ்சாப் அணி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இந்தநிலையில் 112 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வெற்றியிலக்கை கடக்க முடியாமல் தோல்வியடைந்த அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த 2009ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 117 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது .
இதுவே குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகக் காணப்பட்டது. இந்த 16 ஆண்டுகால சாதனையைப் பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது முறியடித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்