சூர்யாவின் 43வது படம் குறித்து வெளியானது அப்டேட்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யா மற்றும் சுதா ஆகியோர் மீண்டும் இணைகிறார்கள் என்ற செய்தி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது. இருந்தாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் 43வது படத்தை சுதா இயக்குகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்டோ நடிக்கின்றனர். இதற்கான தகவல்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கம் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதை முடித்ததும் சுதா இயக்கம் படத்தில் அவர் இணைய உள்ளார்.

சுதா – சூர்யா இணையும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பில் புறநானூறு என்ற தலைப்பு இடம் பெற செய்துள்ளனர். ஆனால் இந்த தலைப்புடன் வேறு தலைப்பும் இருக்கிறது. அதை அறிவிப்பில் மறைத்திருக்கின்றனர். சூர்யா 43வது திரைப்படம் 1967ல் நடைபெற்ற இந்திய எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக இதில் இந்திய எதிர்ப்பில் பங்குபெறும் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்