சுவிட்சர்லாந்தில் 15வயது சிறுவன் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

சுவிட்சர்லாந்தின் பாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 15வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசல்லாண்ட் ஆஸ்  (Aesch BL) பகுதியில் வெள்ளிநள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 15வயதுடைய சுவிஸ்நாட்டு சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் 18வயதுடைய சுவிஸ்நாட்டு இளைஞன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அரச வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்