சுவிட்சர்லாந்தின் மையப்பகுதியில் நகைக்கடை கொள்ளை முயற்சி தோல்வி
சுவிட்சர்லாந்து பாசலின் நகர மையத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்பட்ட கொள்ளை முயற்சி தேல்வியில் முடிவடைந்துள்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு காரைக் கொண்டு கடை ஜன்னலை உடைத்து உட்செல்ல எடுத்த முயற்சி இறுதியில் தேல்வியில் முடிவடைந்த நிலையில் கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பாசலின் நகர மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, ஃப்ரீ ஸ் ( Freie ) வீதியில் ஒரு கொள்ளை முயற்சி நடந்ததுள்ளதாகவும், சில அடையாளம் தெரியாத குற்றவாளிகள் ஒரு பிஎம்டபிள்யூ-5 ரக (BMW 5-series) காரை நேரடியாக நகைக் கடையின் ஜன்னலில் மோதி இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, குற்றவாளிகள் சேதமடைந்த ஜன்னல் வழியாக கடைக்குள் நுழைய முயன்றனர். இருப்பினும், அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை – இறுதியில் பார்ஃபுசர்பிளாட்ஸ் (Barfüsserplatz) திசையில் காரில் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
பாசல் மாநில காவல்துறையினரால் உடனடியாக பாரிய அளவிலான தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
