சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள்
சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என , சுவிஸ் விபத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெர்ன் மாகாணத்தின் வீதிகளில் கிட்டத்தட்ட 130 போக்குவரத்து விபத்துக்கள் நிகழ்ந்தன. ஆறு விபத்துகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், முதற்கட்ட தகவல்களின்படி, எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வியாழன்; நண்பகல் ஒரு மணி தொடக்கம் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி வரை, பெர்ன் மாநிலம் முழுவதும் போக்குவரத்து விபத்துக்கள் குறித்து மொத்தம் 128 புகார்களை பெர்ன் மாநில பொலிசார் பெற்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பெரும்பால பகுதிகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகல் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவின் காரணமாகவே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கடுமையான பனிப்பொழிவினால் ஏனைய மாநிலங்களிலும் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்