சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் குறுநாடக ஆற்றுகை விழா

மட்டக்களப்பு – கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை, கிழக்கு பல்கலைக்கழகத்தில் குறுநாடக ஆற்றுகை விழா நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தர்மிகா ஸ்ரீகந்தராசா நெறியாள்கையின் கீழ், நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கிஸ்ணவேணி விவானந்தராசா ஒருங்கிணைப்பில் நாளை மாலை 3.30 மணிக்கு இராசதுரை அரங்கில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வருத்தத்திலும் ஒரு பொருத்தம் என்னும் தலைப்பில் இடம்பெறவிருக்கும் குறுநாடக ஆற்றுகை விழாவில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்