சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி உயிரிழப்பு

இந்தியாவில் சென்னை வடபழனியில் இன்று வெள்ளிக்கிழமை பால்கனி கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து பூ வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார.

சுமார் 25 ஆண்டுகள் ஆன 6 மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் அவ்வழியாக சென்ற பூ வியாபாரியிடம் பூ வாங்குவதற்காக பால்கனியில் இருந்தபடியே கயிறு கட்டி கூடையை கீழே போட்டுள்ளார்.

பால்கனி மீது பெண் சாயும்போது சுவர் இடிந்து கீழே நின்றிருந்த பூ வியாபாரி தலையின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பூ வியாபாரி பலியான நிலையில் குறித்த பெண் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்