சுழிபுரத்தில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸார், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஒரு போத்தல் கசிப்புடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்