சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்ரகாண்ட் மாநில சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உத்ரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தநிலையில்  குறித்த சுரங்கப்பாதையில் பலர் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.