சுரங்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

பதுளை மாவட்டத்தில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள 42ஆவது சுரங்கத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தெமோதர தொழிற்சாலை பிரிவை சேர்ந்த ராமகிருஸ்ணன் கிருஷ்ணகுமார் (வயது – 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்