சும்மாவே வீடு இரண்டாகும்.. இப்ப வீடே இரண்டாயிடுச்சு..!

இந்தியா – விஜய் தொiலைகாட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ப்ரமோ வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த முறை யார் போட்டியாளர்களாக உள்ளே போகப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

இந்த முறை 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான ப்ரமோவில் கமல் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். வழக்கமாக சண்டை போட்டு, பிக்பாஸ் வீடு இரண்டாகும். இந்த முறை வீடே இரண்டாகியிருப்பதால் சண்டையும் வேறுவிதமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்