சுனாமி பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் நிற்கும் மக்கள்!
மட்டக்களப்பு நாவலடி பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதை அவதானிக்க முடிகின்றதுடன், கடல் நீர் உள்வாக்கப்படுவதாக குறித்த பிரதேச மக்கள் அச்சமடைந்து வீதிகளில் குழுவாக கூடி இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி நாவலடி உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் உள்வாங்கியுள்ளதாகவும் சுனாமிக்கான அறிகுறி தென்படுவதாக தெரிவித்தும் தகவல் பரப்பப்பட்டதையடுத்து மக்கள் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
எனினும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் , சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் , மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.