சுங்கத்தினால் சேகரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஏலத்தில்

வருடத்தின் ஆரம்பம் முதல் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்ட 18000 மதுபான போத்தல்கள், அரசுடைமை ஆக்கப்பட்டு தற்போது அவை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இவை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினால் ஏல நடவடிக்கை உட்படுத்தப்படவுள்ளன.

மேலும் இது தொடர்பான கலந்துரையாடல்களை மதுவரி திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.