சுகாதார பரிசோதகரின் கார் தீக்கிரை
பெலியத்த குடாஹில்ல ஜய மாவத்தையில் ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் கார் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை தீயில் எரிந்து நாசமானதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அதிகாரியின் வீட்டின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தீ பிடித்த கார் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், காருக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்