சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான முறையில் பணம் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரபூர்வமான முறையில் இவ்வாறு பணம் திரட்டப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே இவ்வாறான கோரிக்கைகளை நம்பி நன்கொடைகளை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்குமாறு கோரப்பட்டால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சு தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்