சீரற்ற வானிலை : பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றுப் பரீட்சை நிலையங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.