சீனா மீதான வரிகள் 125 சதவீதமாக அதிகரிப்பு

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், சீனாவிற்கான வரியை அவர் அதிகரித்துள்ளதுடன் இது அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று புதன் கிழமை முதல் அமுலாகும் வகையில் பல உலக நாடுகளுக்கான அமெரிக்காவின் புதிய வரி அமுலுக்கு வந்திருந்தது.

இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருந்தது.

எனினும் பல உலக நாடுகளுடன் இந்த வரி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்வதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், குறித்த வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சீனாவுக்கான வரியை அமெரிக்கா 125 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சீனா 84 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா வரியை அதிகரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க