Sri Lanka Tamil News Site

சீனாவில் மீண்டும் தாண்டவமாடும் கொரோனா

- Advertisement -

சீனாவில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல்முறையாகப் 11 முக்கிய வட்டாரங்களில் கட்டாயப் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் புதிதாக முப்பது பேருக்கு வைரஸ் தொற்று பதிவானதைத் தொடர்ந்து மத்தியில் இருக்கும் சோயங் வட்டாரத்தில் ஏற்கனவே பெரிய அளவில் வைரஸ் பரிசோதனை நடப்பில் உள்ளது.  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

- Advertisement -

பீஜிங்கின் மிகப்பெரிய வட்டாரம் சாவ்யாங்கில் மூன்றரை மில்லியன் பேர் வசிக்கின்றனர். பெரும்பகுதி புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் இருந்தே வந்துள்ளன.

எந்நேரத்திலும் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டனர்.   நிதி மையமான ஷங்ஹாயில் திடீர் முடக்கநிலை ஏற்பட்டபோது உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை மறந்துவிட வேண்டாம் என்று தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு சமூக ஊடகத்தினர் நினைவுறுத்தி வருகின்றனர்.

ஷங்ஹாய் நகரம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக முடக்கநிலையில் உள்ளது. கடந்த திங்களன்று அங்கு புதிதாக இருபதாயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அங்கு முடக்கநிலை இப்போதைக்கு முடிவுக்கு வரும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.

 

- Advertisement -