சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகரில் கடந்த மார்ச் மாதத்தில் முடக்க நிலை அறிவிப்பட்டது தொடக்கம் முதல் முறையாக மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
89 மற்றும் 91 வயதுக்கு இடைப்பட்ட தடுப்பூசி பெறாதவர்களே உயிரிழந்திருப்பதாக அந்த நகர சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகரின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்களே முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதாக ஷங்ஹாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் அந்த நகர் மீண்டும் முழுமையாக கொரோனா சோதனையை எதிர்கொண்டிருப்பதோடு நகரில் பெரும்பாலான மக்கள் நான்காவது வாரமாக கடுமையான பொது முடக்கத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.