Sri Lanka Tamil News Site

சீனாவில் மீண்டும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று

- Advertisement -

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா தொற்றால் ஏற்பட போகும் பாதிப்புகள், குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

2019இல் கொரோனா பரவியதில் இருந்து பல வகைகளில் உருமாற்றமடைந்துள்ளது. அனைத்து மாறுபாடுகளில் ஓமிக்ரான் வகை பாதிப்பு மட்டும் ஓராண்டு மேலாக ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக உள்ளது. தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு ஒமிக்ரான் BF.7 வகை மாறுபாடு  ஆகும்.

இந்த வகை மக்களை எளிதில் பாதிக்கிறது. தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் இந்த மாறுபாடு தனிநபர்களை சமமாக பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

- Advertisement -

மருத்துவ அறிக்கைகளின்படி, BF.7 மாறுபாடு பெரும்பாலும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் ஆகியவை BF.7 மாறுபாடு தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் வரை தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும்  , அடுத்த சில மாதங்களில் சுமார் ஒரு இலட்சம் இறப்புகள் ஏற்படலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில்,  இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பரவி வரும் தொற்றின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

- Advertisement -