சிவப்பு பச்சரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை!

அடுத்த வாரம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டுவதற்கு பச்சை அரிசி இன்மையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு பச்சை அரிசி கிடைக்காததால் சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர் உடனடியாக சிவப்பு பச்சை அரிசியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்