Sri Lanka Tamil News Site

சிறைச்சாலைகளில் இருமடங்காக கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

- Advertisement -

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்ச கைதிகளை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், தற்போது நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சில சிறைச்சாலைகள் அதன் கொள்ளளவை 300வீதம் தாண்டியுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தின் தொடக்கத்தில் படிப்படியாக அதிகரித்து, நவம்பர் 25ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 26,000 ற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கடந்த ஆண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 74வீதம் பேர் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் 4,600 (34வீதம்) அதே சமயம் அதே குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்களின் எண்ணிக்கை 8,700 (65வீதம்) ஆகும்.

சிறைச்சாலையில் உள்ள பெரும்பாலான கைதிகளில், 62 வீதமானவர்கள் சந்தேகநபர்கள் என ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

தரவுகளின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 50வீதத்தை தாண்டியுள்ளது.

- Advertisement -