
சிறுவர் பூங்கா திடல் திறந்து வைப்பு
-யாழ் நிருபர்-
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் வலி தென்மேற்கு பிரதேச சபையினால் சிறுவர் பூங்கா கடந்த சனிக்கிழமை மாலை சபையின் தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வைபவரீதியாக சிறுவர் பூங்கா திடலை திறந்து வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், வலி தென்மேற்கு தவிசாளர் அ.ஜெபநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.