சிறுவர் கடத்தல் தொடர்பில் சமூக வலைதளங்களில் போலியான பதிவுகள் புலனாய்வுப் பிரிவு தீவிர கவனம்
சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்ளை கடத்தப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் போலியான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் புலனாய்வுப் பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான பதிவுகள் பரப்பப்படுவதாகவும், அந்த பதிவுகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுவர் கடத்தல் தொடர்பில் தேடப்படும் எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலின் சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் தகவல்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
“இருப்பினும், இதுபோன்ற போலி சமூக ஊடக இடுகைகளை வெளியிட்ட சில நபர்கள் உள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் கடத்தல் தொடர்பில் சில நபர்களை கைது செய்ய பொலிசார் தேடுவதாக போலியான சமூக ஊடக பதிவுகளை பகிர்ந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் புலனாய்வுப் பிரிவினரும் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா தெரிவித்தார்.
சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளன இருப்பினும், புகார்களை விசாரித்ததில், அவற்றில் பெரும்பாலானவை போலியான சம்பவங்கள் என்பதும், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்ததுள்ளது.
எவ்வாறாயினும், அந்த புகார்களில் ஏதேனும் உண்மை உள்ளதா என்பதை கண்டறிய பொலிசார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர எனவு
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான புகைப்படங்கள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எஸ்எஸ்பி தல்துவா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்