Sri Lanka Tamil News Site

சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

- Advertisement -

-யாழ் நிருபர்-

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய, சாந்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் சிறுமியொருவருடன் குடும்பம் நடாத்துகின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

 

- Advertisement -