சிறுமியின் உயிரை பறித்த ஜம்புக்காய்

ஜம்புக்காய் தின்ற சிறுமி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். குருநாகல் வாரியப்பொலை பகுதியில் நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகளான சிறுமியே உயிழிழந்துள்ளார்.

வாரியபொலை ஹம்மாலிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தாவை பார்க்க தாயாருடன் சென்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

சிறுவர்களுடன் முற்றத்தில் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தையின் தொண்டையில் ஜம்புக்காய் சிக்கியதாக சிறுமியின் தாத்தா கூறுகிறார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது சிறுமி உயிரிழந்தாரெனத் தெரிவிக்கப்பட்டது.

 

Minnal24 FM