சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, உதவிச் சேவை தொடர்பான சிரேஷ்ட உதவிப் பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புதன்கிழமை இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, அப்பதவியை வகித்து வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த வேளையில், அரச புலனாய்வு சேவை பிரிவின் பிரதானியாக நிலந்த ஜயவர்தன கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் குறித்த தாக்குதல்கள் நடந்த பின்னரே தனக்கு தகவல் கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.