சின்னமுத்து – ருபெல்லா நோய்த்தடுப்பு வாரம் பிரகடனம்
சின்னமுத்து மற்றும் ருபெல்லா நோய்த்தடுப்பு வாரத்தை இன்று முதல் சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை தெரிவு செய்யப்பட்ட குடும்ப சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் வீடு வீடாகச் சென்று 9 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட சின்னம்மை தடுப்பூசியைப் பெறாதவர்களைக் கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
சின்னமுத்து – ருபெல்லா தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் சின்னமுத்து – ருபெல்லா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இந்த மாதத்தில் ஏனைய 4 சனிக்கிழமைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஊடாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்