சினிமா திரையரங்கு முன்பாக தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

-யாழ் நிருபர்-

இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது.

குடும்ப உறவினர்களுக்கு கடந்த 19.03.2022 அன்று வேலைக்கு போய்வருவதாக கூறி விட்டு சென்று இரவு வரை வராத காரணத்தினால் தமது முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் குடும்ப உறவினர்கள் முறைப்பாட்டினை செய்துள்ளனர்

அதன் படி குறித்த சம்பவத்தில் இன்று மாலை 05.30 மணியளவில் யாழ். நகர் மத்திய உணவுக்களஞ்சிய பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டு நிலையில் அவரின் உடலம் காணப்பட்டுள்ளது.

இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.