சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில் இன்மையினை கருத்தில் கொண்டு லண்டனில் வாசிக்கும் ஸ்டீபன் மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அருண் அவர்களின் நிதி உதவியுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கூலித் தொழிலாளர்களின் சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களான தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள
“வணக்கம் வாழ்க தமிழ்”‘அமைப்பின் ஊடாக இன்று புதன்கிழமை காலை10.30 மணி அளவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வணக்கம் வாழ்க தமிழ்’அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் மற்றும் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மற்றும் ஜனா ஆகியோரின் ஏற்பாட்டில் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

“வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் ஊடாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சில தமிழ் இளைஞர்களும் ஸ்டீபன் மற்றும் அருண் ஆகியோரினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.