சித்தங்கேணி இளைஞன் மரணம் : கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு

-யாழ் நிருபர்-

 

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில் இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தெரிவித்தார்.

 

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணை நீதியாக இடம்பெற தேவை ஏற்படின் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக அழைக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்