Sri Lanka Tamil News Site

சிசிடிவி உட்பட 10 பொருட்களுக்கான இறக்குமதிக்கு இன்று முதல் தடை நீக்கம்

- Advertisement -

சிசிடிவி உட்பட 10 பொருட்களுக்கான இறக்குமதிக்கு இன்று முதல் தடை நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறைக்கான ஆற்றல் பானங்கள் ( energy drinks) , மரச்சாமான்களுக்கான எம்டிஎப்( MDF ) பலகைகள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிசிடிவி மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட 10 பொருட்களில் அடங்கும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்

- Advertisement -