மட்டக்களப்பு ஜயந்திபுரம் பகுதியில் உள்ள தனது தாயாரை நல்லடக்கம் செய்த கல்லறையை உடைத்து நாசம் செய்துவிட்டதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த பகுதியில் நின்று இன்று புதன்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது.
சிங்கள மக்களுக்கு சொந்தமாக குறித்த இடத்தினை அங்குள்ளவர்கள் இடித்து நாசம் செய்துள்ளனர். நான் ஜனாதிபதி வரும் போது கலகம் செய்தேன் என என் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் இது தொடர்பில் நான் செய்த முறைப்பாட்டை பொருட்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
ராசமாணிக்கமும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தில் உரிமை கேட்கிறார்கள் ஆனால் இங்கு மயானத்தில் கூட சிங்கள மக்களுக்கு உரிமை இல்லை. சிங்கள மக்களுக்கு ஏன் இப்படி அநியாயம் செய்கிறீர்கள்? எங்களது சாபம் உங்களை சும்மா விடாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்