
சிஐடி யில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பிள்ளையான்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், உத்தியோகபூர்வமாக கைதுக்கான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை
இந்தநிலையில், அவர் இன்று புதன்கிழமை அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்