சாவகச்சேரி வைத்தியசாலையின் கடமைகளை பொறுப்பேற்றார் வைத்தியர் ரஜீவ்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கடமைகளை வைத்தியர் ரஜீவ் இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணிபுரிந்த வைத்தியர் அர்ச்சுனா வடக்கு சுகாதார துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் வடக்கு சுகாதார துறைக்குள் இருந்து அவருக்கு பாரிய எதிர்ப்பும், மக்களிடம் இருந்து பாரிய ஆதரவும் கிடைத்தது.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தும், வடக்கு சுகாதார துறையில் உள்ள ஊழல்களை தீர்க்குமாறு கோரியும் மக்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வைத்தியர் அர்ச்சுனா நேற்று வைத்தியசாலையை விட்டு கொழும்புக்கு புறப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியசாலையின் கடமைகளை இன்று வைத்தியர் ரஜீவ் பொறுப்பேற்றார்.

மேற்படி பொறுப்பேற்பு நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன், மதகுருமார்கள் கலந்து கொண்டிருந்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்