சாரதி வெட்டிக் கொலை

தலங்கம, அருக்பிட்டிய பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்குமிடம் ஒன்றில் 45 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து, தலங்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சம்பவத்தின் நோக்கம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரிய வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்