
சாரதிக்கு குற்றச் சீட்டு வழங்குவதற்குப் பதிலாக ஒரு லீற்றர் பெற்றோலை அபகரித்த இரு பொலிஸார்
முச்சக்கர வண்டியில் புத்தர் சிலை மற்றும் யானைத் தந்த மாதிரிகள் வைத்திருப்பது குற்றம் எனக் கூறி சாரதிக்கு குற்றச் சீட்டை வழங்குவதற்குப் பதிலாக முச்சக்கரவண்டியில் இருந்து ஒரு லீற்றர் பெற்றோலை எடுத்துச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரை மாவத்தகம பொலிஸ் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
குருணாகல் இங்குருவத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் வெலேகெதர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட தகவலைக் கண்ணுற்ற வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத்தின் விசேட பணிப்புரையின் பேரிலேயே இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்