சாணக்கியனால் எவர்கிறீன் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இருதயபுரம் எவர்கிரீன் அணியினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுமார் 70,000 ரூபாவிற்கு மேற்பட்ட விளையாட்டு உபகரணங்களும், பாதணிகளும் வழங்கினார்.

குறித்த விளையாட்டு உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி இணைப்பாளர் தினேஷ் குமாரினால் எவர்கிரீன் விளையாட்டுக்கழக தலைவர் சி.டிலுக்சனிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் எவர்கிரீன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எவர்கிறீன் விளையாட்டு கழகத்திற்காக 50,000 ரூபா நிதி ஒதுக்கீட்டையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி இணைப்பாளர் தினேஷ் குமார், எவர்கிரீன் அணியின் விளையாட்டு மூத்த உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.