சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை என்பவரால் ‘கவன ஈர்ப்பு’ போராட்டம்

இந்தியாவின் – தமிழ் நாடு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும், தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை காலணிகள் அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை நேற்று வியாழக்கிழமை தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்றையதினம் வெள்ளிக்கிழமை 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘கவன ஈர்ப்பு’ போராட்டம் நடத்தினார்.

பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை அண்ணாமலை நடத்தினார்.

அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்குக் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்