சவர்மா உண்ட சிறுமி பலி

இந்தியாவின் நாமக்கல் பகுதியில் உள்ள உணவகமொன்றில் சவர்மா வாங்கி உண்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.

9ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி, கடந்த சனிக்கிழமை பிற்பகல் மதிய உணவுக்காக சவர்மா வாங்கி உண்ட சில மணி நேரங்களில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று திங்கட் கிழமை காலை குறித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில், நாமக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் இனிவரும் நாட்களில் சவர்மா தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.