சற்று குறைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 202,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்