சர்வதேச பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் அபாயம்

சர்வதேச நாணய நிதியம், உக்ரைன்–ரஷ்யப் போர் காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி முன்னுரைப்பை கீழ்நோக்கித் திருத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சர்ச்சையின் தாக்கம் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பெரிய அளவில் உணரப்படும் என்று அது கூறியது.
சர்வதேச பொருளாதாரத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் 3.6 வீதமாக இருக்கும் என்று அந்த நிதியம் முன்னுரைத்துள்ளது.

இவ்வாண்டுக்காக முன்னர் வெளியிடப்பட்ட கணிப்பை விட அது 0.8 வீதம் குறைவு. 2023ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பைக் காட்டிலும் அது 0.2 வீதம் குறைவு.
உக்ரேன்–ரஷ்யப் பூசலின் தாக்கம் சர்வதேச அளவில் கொள்கை மாற்றங்களுக்கும் விலை அதிகரிப்புக்கும் இட்டுச்செல்லும் என்று நிதியத்தின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வைரஸ் பரவல் சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடுகள் இன்னமும் முழுமையாக மீளவில்லை. அண்மைய போருக்கு முன்பாகவே நாடுகள் பணவீக்கத்தையும் விநியோகத் தொடர்களில் இடையூறுகளையும் சமாளிக்க வேண்டியிருந்ததை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.