
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் வலுவடைந்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
நிதி சந்தையில் ஏற்பட்டுள்ள ஸ்திரநிலையற்ற தன்மையை அடுத்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி நகர்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 3,200 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்